மின்சார ரயில்களின் சேவை மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


மின்சார ரெயில் சேவையில் நாளை மற்றும் நாளை மறுநாள் மாற்றம் செய்யபட உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்ணையில் கொரோனா ஊரடங்கிற்கு பின் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், நாளை மற்றும் நாளை மறுதினம் பராமரிப்பு பணிக்காக மின்சார ரயில்களின் சேவை மாற்றி அமைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக 27-ந் தேதி மட்டும் பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயில்கள் இயக்கப்படும். மேலும், அன்று பூங்கா - செங்கல்பட்டு, திருமால்பூர் இடையே காலை 4.20 மணி முதல் இரவு 11.20 மணி வரை 61 மின்சார ரெயில் சேவைகளும், திருமால்பூர், செங்கல்பட்டு - பூங்கா இடையே காலை 3.55 மணி முதல் இரவு 11.55 மணி வரை 62 மின்சார ரெயில் சேவைகளும் இயக்கப்படும்.

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.10 மணி, தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 10.25, 11.25 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 26-ந்தேதி(நாளை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

 வேளச்சேரி-கடற்கரை இடையே காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் வருகிற 26-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

 கடற்கரை-வேளச்சேரி இடையே காலை 9.40 மணி, வேளச்சேரி-கடற்கரை இடையே காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் வருகிற 27-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Southern Railway announces change in service of electric trains


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->