சென்னை டூ மதுரை வந்தே பாரத் ரயில்.. முதற்கட்ட பணிகளை தொடங்கிய தெற்கு ரயில்வே..!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வந்தே பாரத் என்ற பெயரில் அதிநவீன வசதிகள் கொண்ட ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்தது. அதன்படி இந்தியாவில் முக்கிய நகரங்களுக்கு இடையே உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த திட்டத்தின் மூலம் டெல்லி முதல் வாரணாசி வரை முதல் வந்தே பாரத் ரயில் கடந்த 2019 ஆம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது. அதன் பிறகு தற்பொழுது வரை 11 வந்தே பாரத் ரயில்கள் இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை கோவை இடையே 12வது வந்தே பாரத் ரயில் சேவையை வரும் ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க சென்னை வருகிறார்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னை மதுரை இடையே வந்தே பாரத் ரயில்களை இயக்குவதற்கான பணிகளை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.

வந்தே பாரத் ரயிலை மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்துவதற்காகவும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவும் ரயில் நிலைய நடைமேடையை மின்மயமாக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

அதன்படி மதுரை ரயில் நிலையத்தில் மூன்று மற்றும் நான்காவது நடைமேடை முழுவதும் மின்மயமாக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டர் இறுதி செய்யப்பட்டு அடுத்த மூன்று மாதத்திற்குள் பணிகளை முடிக்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Southern Railway starts initial work for Madurai vande Bharat train


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->