#BigBreaking | ஓபிஎஸ்-க்கு அடுத்த ஆப்பு! சற்றுமுன் அரங்கேறிய சந்திப்பு! அரைமணி நேரத்தில் வெளியாகும் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


சென்னையில் சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக கொறடா எஸ்பி வேலுமணி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாகவும், சட்டபேரவையில் இருக்காய் விவகாரம் தொடர்பாகவும் சபாநாயகர் உடன் எஸ் பி வேலுமணி ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஓபிஎஸ் இருக்கை மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இரு தினங்களுக்கு முன் சட்டப்பேரவையில் ஓபிஎஸ் அதிமுக சார்பாக வரவேற்கிறேன் என்று, அதிமுக சார்பாக பேசியதற்கும், அவரை அதிமுக சார்பாக பேச அனுமதித்தார்க்கும், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

அப்போது சபாநாயகர் அப்பாவு, ஓபிஎஸ் அதிமுக உறுப்பினர் இல்லை, எதிர்கட்சி துணைத்தலைவர் இல்லை. ஆனால், அவர் மூத்த உறுப்பினர், முன்னாள் முதல்வர் அதனடிப்படையிலேயே அவரை பேச அனுமதித்ததாக விளக்கமளித்தார்.

இதன் காரணமாக சபாநாயகர் தனது முந்தைய முடிவுகளை மாற்றி, அதிமுகவின் கொறடா கோரிக்கையை ஏற்று ஓபிஎஸ் இருக்கை மற்றும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிகளை பறிப்பார் என்று  அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும், நேற்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பும் அதிமுகவின் தலைமை விவகாரத்தில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளதும், இது ஓபிஎஸ் மீது சட்டப்பேரவையில் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாகவுமே தெரிகிறது. 

அதே சமயத்தில் மேல்முறையீட்டு வழக்கை சுட்டிக்காட்டியும், தேர்தல் ஆணையத்தை சுட்டி கட்டியும் ஓபிஎஸ் தனது எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை காப்பற்றிக்கொள்வார் என்று சொல்லப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SP Velumani meet appavu 29 march


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->