வார விடுமுறை - தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு..!
special bus run in tamilnadu for week holiday
வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை உள்ளிட்ட நாட்களில் தமிழகத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது வார இறுதி நாட்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்து இருப்பதாவது:-
"வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 265 பேருந்துகளும், சனிக்கிழமை 270 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதே போன்று, கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 51 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாதவரத்தில் இருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 20 பேருந்துகள் என்று ஆக மொத்தம் 677 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுமட்டுமல்லாமல், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
English Summary
special bus run in tamilnadu for week holiday