தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எப்போது தெரியுமா?
special bus run in tamilnadu for weekend
தமிழகத்தில் அரசு விடுமுறை, தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் ஊருக்கு சிரமமின்றி செல்வதற்கு எதுவாக இந்த பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து பிப்ரவரி 21-ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 22-ஆம் தேதி உள்ளிட்ட இரண்டு நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 21-ந்தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து 245 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 51 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
பிப்ரவரி 22-ந்தேதி சனிக்கிழமை கிளாம்பாக்கத்தில் இருந்து 240 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 51 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
special bus run in tamilnadu for weekend