திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு தரிசனம் ரத்து..!
special dharisanam cancelled in thiruchenthur temple
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகைத் தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனால், அவர்களுக்காக சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், பக்தர்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்பு தரிசனத்தை ரத்து செய்வதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:

"கோடை விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வாரத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வியாழக் கிழமைகளில் திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு தரிசனம் கிடையாது.
கோடையில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க, சிறப்பு தரிசனத்தை ரத்து செய்துள்ளதாக திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
special dharisanam cancelled in thiruchenthur temple