#சந்திராயன்3 || சிறை கைதிகள் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடு.!! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன்-3 விண்கலத்தை கடந்த மாதம் விண்ணில் செலுத்திய நிலையில் இன்று மாலை 6:04 மணிக்கு நிலவில் தரையிறங்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.

இந்தியா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சந்திராயன்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை உலக நாடுகளும் உற்றுநோக்கி காத்திருக்கும் இந்த சூழலில் சிறையில் இருக்கும் கைதிகளும் இந்த அற்புதமான நிகழ்வை காண தமிழ்நாடு சிறை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக அரசின் சிறைத்துறை சார்பில் மதுரை மற்றும் பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் உள்ள கைதிகள் சந்திராயன் மூன்று மின்கலத்தின் விக்ரம் வேந்தர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறையில் இருக்கும் கைதிகளும் விக்ரம் வேந்தர் நிலவில் தரையிறங்குவதை நேரடியாக காணும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Special provision for jail inmates in Chandrayaan3 landing program


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->