திருச்சி - தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில்.!
special train run trichy to thambaram
தமிழகத்தில், தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் பயணிகளின் பயணம் சிரமம் இல்லாமல் இருப்பதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வார விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு மெமு ரெயில் இயக்கப்படுகிறது. இது குறித்து திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"இந்த சிறப்பு ரெயிலானது இன்று இரவு 11 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு கும்பகோணம், சிதம்பரம், விழுப்புரம் வழியாக (திங்கள் கிழமை) நாளை காலை 6.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
special train run trichy to thambaram