ஹாக்கி வீரர் தியான் சந்த் உருவசிலைக்கு மரியாதை செலுத்திய விளையாட்டு துறை அமைச்சர்..!
Sports Minister paid respects to hockey player Dyan Chand statue
இந்திய ஹாக்கி விளையாட்டின் தலைசிறந்த வீரராக மேஜர் தியான்சந்த் கருதப்படுகிறார். மத்திய அரசு அவரது பிறந்தநாளை தேசிய விளையாட்டு தினமாக அறிவித்திருந்தது. இதையொட்டி பிரதமர் மோடி விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தமது டுவிட்டர் பதிவில், தேசிய விளையாட்டுகள் தினம் மற்றும் மேஜர் தியான்சந்த் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சமீப ஆண்டுகளாக விளையாட்டுகள் மிக சிறந்தவையாக உள்ளன. இந்நிலைமை தொடரட்டும். இந்தியா முழுவதும் விளையாட்டுக்கள் பிரபலமடையட்டும். என்று பிரதமர் மோடி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆசியக் கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் வெற்றிக்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் மந்திரி நிசித் பிரமாணிக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று, ஹாக்கி வீரர் தியான் சந்த் உருசிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்தாவது, "ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். நாம் எப்போதும் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெறுகிறோம். ஆனால் அது ஒரு விளையாட்டு. தோல்வியும், வெற்றியும் அதன் ஒரு பகுதி.
ஒலிம்பிக், பாராலிம்பிக்ஸ் உள்ளிட்ட பல விளையாட்டுப் போட்டிளில் எங்கள் விளையாட்டு வீரர்கள் சிறந்து விளங்கியுள்ளனர். விளையாட்டுகளை கொண்டாடப்பட வேண்டும். மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளை 250க்கும் மேற்பட்ட இந்திய விளையாட்டு ஆணைய மையங்களில் நாங்கள் இன்று கொண்டாடுகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
English Summary
Sports Minister paid respects to hockey player Dyan Chand statue