ஸ்ரீ சற்குரு அப்பா பைத்திய சாமி குரு பூஜை... பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய புதுச்சேரி முதல்வர்!
Sri Satguru Appa Paitya Saami Guru Pooja Puducherry CM distributes food to devotees
சேலம் மற்றும் புதுச்சேரியில் ஸ்ரீ சற்குரு அப்பா பைத்திய சாமி கோவிலில் நடைபெற்ற குரு பூஜை விழாவில் முதலமைச்சர்- ரங்கசாமி,அமைச்சர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரிகோரிமேட்டில் உள்ள ஸ்ரீ சற்குரு அப்பா பைத்திய சாமி கோவிலில் ஆண்டுதோறும் குரு பூஜை விழா வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு குரு பூஜை விழா இன்று நடைபெற்றது , அப்போது குரு பூஜை விழாவில் முதலமைச்சர்- ரங்கசாமி, சபாநாயகர்- செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள்கலந்துகொண்டனர்.அதனை தொடர்ந்து அனைத்து பக்கதர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.
இதேபோல ஸ்ரீ சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் 25ம் ஆண்டு குருபூஜை விழாவினையொட்டி சேலம்-சூரமங்கலத்தில் உள்ள ஸ்ரீ சத்குரு சுவாமிகளுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், திருமுருகன் ஆகியோர் குடுத்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக கடற்கரை சாலையில் பாரம்பரிய வாகனங்களின் அணிவகுப்பு நடைபெற்றது.அப்போது இந்த கண்காட்சியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர். இந்த கண்காட்சியில் சபாநாயகர் செல்வம். அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், திருமுருகன், ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.கடற்கரை சாலையில் பாரம்பரிய வாகனங்களின் அணிவகுப்பு நடைபெற்றதை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.
English Summary
Sri Satguru Appa Paitya Saami Guru Pooja Puducherry CM distributes food to devotees