இலங்கை தூதரகத்தை அகற்றும் நாளும் வரும் - முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு விவகாரத்தில் வைகோ பேச்சு..! - Seithipunal
Seithipunal


இலங்கையில் உள்ள முள்ளிவாய்க்கால் யாழ் பல்கலைக்கழத்தில், தமிழர்கள் போரில் கொலை செய்யப்பட்டதன் நினைவு தூண் உள்ளது. இந்த நினைவுத்தூண் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. 

இந்த விஷயம் அங்குள்ள தமிழ் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்திலும் இந்த தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடுமையான கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், நினைவு தூண் இடிக்கப்பட்ட இடத்திலேயே மற்றொரு புதிய நினைவு தூண் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.. 

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள இலங்கையின் துணை தூதரகம் முற்றுகை போராட்டமானது வைகோ தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இன்று காலை இலங்கை துணை தூதரக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய வைகோ பேசுகையில், " நினைவு தூண் இடிக்கப்பட்ட இடத்தில் மற்றொரு புதிய நினைவு தூண் அமைக்கப்படவுள்ளது. இதனால் தமிழர்கள் மீண்டும் தங்களின் இன எழுச்சியுடன் ஒற்றுமையாக திரண்டுள்ளனர். 

சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை இன்று வேண்டும் என்றால் அகற்ற இயலாமல் போயிருக்கலாம். ஆனால், எதிர்கால சந்ததியினர் கட்டாயம் அதனை செய்வார்கள். அவர்களுக்கு அந்த எழுச்சி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறாமல் இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட திமுக டி.கே.எஸ் இளங்கோவன், வைகோ, விசிக வன்னியரசு, சி.பி.ஐ.எம் கே.பாலகிருஷ்ணன் மற்றும் தொண்டர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilanka Mullivaikkal University Tamil People War Memorial Statue Demolished Issue Vaiko Speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->