தமிழக எல்லையில் பிடிபட்ட இலங்கை மீனவர்கள்! அடுத்து நடந்தது என்ன?
Srilankan fishermen arrested
நாகை, வேதாரண்யம் தாலுகா ஆற்காட்டுதுறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பைப்பர் படகுகளில் கடலுக்கு மீன்பிடிப்பதற்காக சென்று பின்னர் அவர்கள் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆற்காட்டுதுறை மீனவ கிராமத்திற்கு கிழக்கே வங்க கடலில் இரண்டு நடுக்கல் மயில் தொலைவில் மற்றொரு பைபர் படகு நின்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து ஆற்காட்டுத்துறை மீனவர்கள் உடனடியாக சென்று பார்த்தபோது இலங்கைக்கு சொந்தமான பைபர் படகில் 2 மீனவர்கள் இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் இலங்கை மீனவர்கள் மீட்கப்பட்டு வேதாரண்யம் கடலோர காவல் குழுசாரிடம் ஆற்காடு துறை மீனவர்கள் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் அவர்கள், இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், மைக்கேல் என்பதும் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென படகில் எஞ்சின் பழுதடைந்ததால் இந்திய கடல் பகுதிக்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இலங்கை மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக தெரிவித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Srilankan fishermen arrested