நாளை முதல் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு ஆரம்பம்.!! - Seithipunal
Seithipunal


நாளை முதல் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு ஆரம்பம்.!!

தமிழகத்தில் நடப்பாண்டிற்கான பொது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதன் படி பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொது தேர்வு கடந்த திங்கள் கிழமையுடன் முடிவடைந்த நிலையில் இன்றுடன் பதினொன்றாம் வகுப்பிற்கான தேர்வுகளும் முடிவடைய உள்ளது.

இதைத் தொடர்ந்து நாளை முதல் பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ஆரம்பமாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் இந்தத் தேர்வை 9 லட்சத்து 22 ஆயிரத்து 725 மாணவர்கள் எழுத உள்ளனர்.

இதற்கு முன்னதாக நடைபெற்ற பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வில் அதிகளவில் மாணவர்கள் 'ஆப்சென்ட்' என்றுத் தகவல் வந்ததால், செய்முறைத்தேர்வுக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டது. அதன்படி கடந்த மாதத்தில் செய்முறைத்தேர்வு நிறைவுபெற்றது. 

இந்நிலையில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நாளை ஆரம்பமாகிறது. ஏற்கனவே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆன விவகாரம் தமிழகத்தில் தாண்டவம் ஆடியதால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முதல் நாளான தமிழ்தாள் தேர்வில் எவ்வளவு பேர் 'ஆப்சென்ட்' ஆவார்களோ? என்ற கேள்வி இப்போவே அனைவரிடமும் எழுந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SSLC exam start tomarrow in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->