கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கால்பந்து ஆட்ட வீராங்கனை பிரியா கடந்த நவம்பர் 7ம் தேதி மூட்டு வலி பிரச்சனை காரணமாக கொளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கால்பந்து ஆட்ட வீராங்கனை பிரியாவுக்கு உடல்நிலை மோசமானது. 

இதன் காரணமாக ஆபத்தான நிலையில் கடந்த 8ம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரியாவுக்கு நவம்பர் 9ஆம் தேதி அறுவை சிகிச்சையின் மூலம் கால் அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரியா திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த இரண்டு டாக்டர்களை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

மேலும் இறந்த மாணவி பிரியாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். மேலும் பிரியாவின் குடும்பத்தினர் உறவினர் வீட்டில் வசித்து வருவதால் அவர்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக வீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரியாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரியாவின் பெற்றோர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்ற ஸ்டாலின் பிரியாவின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். முதல்வர் ஸ்டாலினுடன் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

கால்பந்தாட்ட போட்டிகளில் பிரியா பெற்ற பதக்கங்களையும் சான்றிதழ்களையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். இதை தொடர்ந்து பிரியாவின் குடும்பத்தாருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி மற்றும் தமிழக அரசு சார்பில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கு வழங்குவதற்கான ஆணையை முதல் ஸ்டாலின் வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin gave Rs10lakh relief fund to football player Priya family


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->