#Breaking :: கோவை கார் வெடிப்பு சம்பவத்தை என்ஐஏ விசாரிக்க ஸ்டாலின் பரிந்துரை! - Seithipunal
Seithipunal


பாதுகாப்பை பலப்படுத்த மூன்று இடங்களில் புதிய காவல் நிலையங்கள்! 

கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நேற்று முன்தினம் அதிகாலை 4.15 மணி அளவில் மாருதி கார் வெடித்ததில் ஜமேஷா முபின் என்பவர் பலியானது போலீசார் விசாரணை தெரியவந்தது. ஜமேசா முபின் ஒரு பொறியியல் பட்டதாரி என தெரியவந்தது. அவர் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் ரசாயன பொருள் மற்றும் பொட்டாசியம் சல்பரை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட ரசாயன பொருள்கள் சுமார் 75 கிலோ இருப்பதாக காவல் துறை தெரிவித்திருந்தனர். 

கோவை மாநகர காவல் துறையினர் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்தனர். இதில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), மற்றும் ஜி.எம் நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27) மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோரை நேற்று காவல்துறையினர் கைது செய்து தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தீவிரவாத குழுக்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களாகவும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். 

இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக தலைமை நிலை செயலாளர் இறையன்பு, முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, மாநில உளவுத்துறை தலைவர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனை முடிவில் கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க சிறப்பு படையை உருவாக்கவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் கோவை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin recommendation for NIA to investigate kovai car blast incident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->