நீங்க இன்னும் உயிரோடு தான் இருக்கீங்கன்னு சான்றிதழ் வாங்கிட்டுவாங்க.. ஜெயங்கொண்டம் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்துள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். 72 வயதாகும் இவர் அரசு வழங்க கூடிய ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை வைத்து தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், இந்த மாதத்திற்கான உதவித் தொகை பணத்தை வாங்குவதற்காக சென்றுள்ளார். ஆனால், அவரது வங்கி கணக்கில் போதிய அளவில் பணம் இருந்தும் பணம் எடுக்க முடியவில்லை.

இதனை அடுத்து ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள ஸ்டேட் வங்கிக்கு சென்ற கோவிந்தன் புகார் அளிக்கவே, அப்போது அந்த வங்கியின் அதிகாரி நீங்கள் இறந்து விட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த வங்கி அதிகாரி நீங்கள் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை கிராம நிர்வாக அலுவலரிடம் வாங்கி வருமாறு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கோவிந்தன், கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்து, அவர் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டு, நேராக வங்கி அதிகாரியிடம் அளித்துள்ளார். ஆனால் வங்கி அதிகாரி அதனை வாங்க மறுத்து விட்டு, நீங்கள் தாசில்தாரிடம் சென்று சான்றிதழ் வாங்கி வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தான் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் வாங்க அந்த முதியவர் கோவிந்தன், ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட தாசில்தார் அவர்கள், உங்களுக்கு உண்டான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து அந்த முதியவரை வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

state bank jeyankondam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->