22 வருடங்க... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்ன அதிர்ச்சி செய்தி!
Sterlite issue SC case TNGovt stand
சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்டது என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது என்று, ஸ்டெர்லைட் ஆலை வழக்கில், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பூர்வ வாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆலையை திறக்க கோரும் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தனது வாதத்தில் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுசூழல் மற்றும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி, கடந்த 2018-ம் ஆண்டு, அந்த ஆலையை பூட்டி தமிழக அரசு சீல் வைத்தது.
இதனை எதிர்த்தும், ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தியும், ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற அனுமதி கூறியும் வேதாந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் ஆவணங்கள் மற்றும் எழுத்துப்பூர்வ வாதங்களை தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் உள்ளிட்ட அனைத்து தரப்பும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், தற்போது தமிழக அரசுத்து தனது எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளது.
அதில், கடந்த 22 ஆண்டுகளாக வேதாந்தா நிறுவனம் சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி, அடிப்படையான விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு வந்துள்ளது.
இந்த விவகாரம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தானது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
English Summary
Sterlite issue SC case TNGovt stand