ஆற்காட்டில் சுற்றித் திரியும் தெருநாய்கள் கடித்து ஆறு சிறுவர்கள் காயம்.! - Seithipunal
Seithipunal


இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தெரு நாய்கள் கடித்ததில் காயமடைந்த ஆறு சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திகின்றன. அப்படி சுற்றித் திரியும் தெருநாய்கள் அவ்வப்போது மனிதர்களை பதம் பார்த்து விடுகின்றன. இன்று காலை ஆற்காடு குட்டக்கரை தெருவில் நடந்து சென்ற 6 சிறுவர்களை தெரு நாய்கள் கடித்தன.

இதில் படுகாயமடைந்த அவர்களை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது போன்ற சம்பவங்கள் அந்த பகுதியில் அடிக்கடி நடைபெறுவதால், அங்கு சுற்றித் திரியும் நுாற்றுக்கணக்கான தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்தும்படி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Street dogs


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->