காதலனுடன் சென்ற மாணவி தற்கொலை முயற்சி: ஓட்டுநர் மீது பாய்ந்த போக்சோ வழக்கு!
student attempted suicide POCSO case against driver
கோயம்புத்தூர், பன்னிமடை பகுதி சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
மாணவிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலாஜி கார்டனைச் சேர்ந்த ஓட்டுநர் காட்வின் மைக்கேல் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாலடைவில் காதலாக மாறி இரண்டு பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் இரு வீட்டாரின் பெற்றோருக்கும் தெரிய வந்து அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருவரையும் கண்டித்ததால் மைக்கேல், மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டிற்குச் சென்று மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கடந்த 1 ஆம் தேதி மைக்கேல் மாணவியின் வீட்டிற்கு சென்று மாணவியை கட்டாயப்படுத்தி ஊட்டிக்கு அழைத்துச் சென்றபோது அங்கு உறவினர் ஒருவர் பார்த்துவிட்டு 2 பேரையும் கண்டித்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பதாக எச்சரித்துள்ளார்.
இதனால் மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை அடுத்து மைக்கேல் அங்கிருந்து தப்பிச் சென்றதால் உறவினர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த மாணவியை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாகிய ஓட்டுனர் காட்வின் மைக்கேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தற்போது போலீசார் தலைமறைவாக உள்ள காட்வின் மைக்கேலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
student attempted suicide POCSO case against driver