படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை கண்டித்த ஓட்டுநர்..பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்கள்.! - Seithipunal
Seithipunal


படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை ஓட்டுனர் கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் பேருந்து கண்ணாடியை உடைத்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் தினமும் மாணவர்கள் அதிக அளவில் அரசு பேருந்துகளில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை நடத்துனர் உள்ளே வருமாறு கண்டித்துள்ளார்.

இதனையடுத்து ஓட்டுனருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள் கற்களை வீசி பேருந்தின் கண்ணாடியை உடைத்து தப்பி ஓடிவிட்டனர்.

சிறிது தூரம் அவர்களை துரத்தி சென்ற நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆல் அவர்களை பிடிக்க முடியவில்லை. உடனே பரமக்குடி போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து பரமக்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Students broke the glass of the bus in paramakudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->