சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம்! பலத்த போலீஸ் பாதுகாப்பு! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் காலை 10 மணிக்கு மேல் குடிநீர் அருந்த அனுமதி மறுப்பதாகவும், பின்னர் கழிவறைக்கு செல்லும் மாணவர்களை மிரட்டி அந்த கல்லூரி நிர்வாகம் மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாகவும் மாணவர்கள் குற்றச்சாட்டி உள்ளனர், இதனைத்தொடர்ந்து  மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பச்சையப்பன் கல்லூரி முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிவறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், அனைத்து பிளாக்குகளிலும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், கல்லூரியில் அடிப்படை வசதிகளை நன்கு சரி செய்ய வேண்டும், சேதமடைந்துள்ள கட்டிடங்களை புதுப்பிக்க வேண்டும், தங்கும் விடுதியில் பாதுகாப்பான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், சத்தான உணவுகளை வழங்க வேண்டுமென்று ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனிடையே, பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில், ஜனநாயகத்தை பறிக்கும் வகையில் கல்லூரி நிர்வாகம் செயல்படுகிறது என 100க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தின் உள்பகுதியிலும் கல்லூரி வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியிலும் அமர்ந்து சத்தம் எழுப்பி மாணவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், மாணவர்கள் தங்கள் போராட்டத்தை உரிமைக்கான போராட்டம் என அறிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் , அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையில் கல்லூரி நிர்வாகம் தரப்பில் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Students protest at Pachaiyappan College in Chennai Strong police protection


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->