நாகையில் மாணவர்களே களமிறங்கி புனரமைத்த அரசுப் பள்ளி - பொதுமக்கள் பாராட்டு!
Students Renovated the Government Primary School in Nagercoil
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே உள்ள பூச்சு விளாகம் பகுதியில் அமைந்துள்ளது ஒரு அரசு தொடக்கப் பள்ளி. இந்த தொடக்கப் பள்ளி கட்டிடங்கள் மிகவும் பழுதாகி, வர்ணங்கள் அழிந்த நிலையில் பாசி படர்ந்து காணப்பட்டன. எனவே இங்கு மாணவர்கள் பள்ளிக்கு வரும் சூழல் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் இணைந்து நிதி திரட்டி இந்த பள்ளியினை புதுப்பித்து கொடுத்துள்ளனர். இந்த தொடக்கப் பள்ளியை சீரமைக்க சுமார் 1லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்று தெரிய வந்ததையடுத்து, மாணவர்கள் 20 பேரும் ஒன்று சேர்ந்து தங்கள் குடும்பத்தாரின் உதவியுடன் தேவையான பணத்தை சேமித்து இந்த தொடக்கப் பள்ளியை புனரமைத்துக் கொடுத்துள்ளனர்.
இந்த புனரமைப்பு பணிக்கு 20 நாட்கள் வரை ஆனதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் புனரமைப்பு பணிகள் முடிந்த இந்த தொடக்கப் பள்ளியை திறந்து வைத்துள்ளார்.
இதையடுத்து இந்த பாசி படிந்த நிலையில் இருந்த கட்டிடத்தை வர்ணம் பூசி புனரமைத்துக் கொடுத்த மாணவர்களை அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்களும், மாணவர்களின் பெற்றோர்களும் பாராட்டி வருகின்றனர். முன்னதாக இந்த மாணவர்கள் 20 பேரும் சேர்ந்து அரசுப்பள்ளிகளுக்கு கழிப்பறைகள் மற்றும் சாலையோர மக்களுக்கு குடியிருப்புகள் என்று பல சேவை பணிகளை அவ்வப்போது செய்து வந்துள்ளனர்.
English Summary
Students Renovated the Government Primary School in Nagercoil