திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண் காவலரை ஏமாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் கைது.! - Seithipunal
Seithipunal


ஊட்டி அருகே திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண் காவலரை ஏமாற்றிய துணை ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள அப்பர் குன்னூர் காவல் நிலையத்தில், சிறப்பு துணை ஆய்வாளராக இருந்தவர் சரவணன் (வயது 50). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில் அதே காவல் நிலையத்தில் விவாகரத்து பெற்ற பெண் காவலர் ஒருவரை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

 இது குறித்து பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில் அப்பர் குன்னூர் காவல் நிலைய போலீசார், 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறப்பு துணை ஆய்வாளர் சரவணனை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணை நடத்தி வந்தனர். தற்போது சிறப்பு துணை ஆய்வாளர் சரவணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sub inspector cheat women police in Ooty


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->