ஒரே மாதத்தில் 152 நகர்புற நல்வாழ்வு மையம் திறக்கப்படும்.!! மா.சுப்ரமணியன் அறிவிப்பு.!!
Subramanian said 152 urban welfare centers opened in one month
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரம் காட்டி வரும் நிலையில் சுகாதாரத் துறை சார்பில் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அது குறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் "தமிழக முதல்வரின் உத்தரவின்படி வாரந்தோறும் தமிழக முழுவதும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இரண்டு வாரமுகாம்கள் நிறைவு பெற்ற நிலையில் இன்று மூன்றாவது வாரமாக தொடர்ந்து நடைபெறுகிறது. வாரந்தோறும் 1,000 முகங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 2,200 முகாம்கள் நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் மலேரியா, சிக்கன்குனியா, டெங்கு ஆகிய நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சலுக்கு 300 முதல் 400 பேர் பாதிப்படைந்துள்ள நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவ முகாம் வரும் நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் 4,076 குழுக்களை கொண்டு தமிழகம் முழுவதும் நடத்தப்படும். அதே போன்று அடுத்த ஒரு மாதத்தில் சென்னையில் 40 மற்றும் தமிழக முழுவதும் 112 என தமிழக முழுவதும் 152 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் திறக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
English Summary
Subramanian said 152 urban welfare centers opened in one month