குறைந்த செலவில் எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு மானியம்..!
Subsidy for shooted low cost Tamil movies
குறைந்த செலவில் எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு மானியம்..!
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 28ஆம் தேதியிலிருந்து மானியம் கோரிக்கையின் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று வணிகவரித்துறை, செய்திகள் மற்றும் விளம்பரத்துக்கான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
அப்போது கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுகளில் குறைவான செலவில் தயாரிக்கப்பட்ட தரமான திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூகப் பொறுப்பும் சமுதாய விழிப்புணர்ச்சியும் மிக்க திரைப்படங்களை தரமாகவும், சிறிய முதலீட்டிலும் தயாரித்து வெளியீடுபவரை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மானியம் தமிழக அரசால் அமைக்கப்பட்ட தேர்வு குழுவின் மூலமாக தரமான தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு திரைப்படத்திற்கும் 7 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
English Summary
Subsidy for shooted low cost Tamil movies