உள்ளாடைக்குள் தங்கம் மறைத்து வைத்து கடத்தல்.! சூடான் நாட்டை சேர்ந்த வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில், பயணம் செய்த சூடான் நாட்டை சேர்ந்த வாலிபரிடம் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்பொழுது அவரது உடமைகளில் சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று அவரை முழு பறிசோதனை செய்தனர். 

அதில் உள்ளடைக்குள் தங்கம் மறைத்து வைத்து இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதை எடுத்து அவரிடம் இருந்து ரூ. 82 லட்சத்தி 41 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 850 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். 

மேலும் இது தொடர்பாக சூடான் நாட்டு வாலிபரை கைது செய்து சுங்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sudan young man smuggled gold hidden in his underwear was arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->