நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் திடீர் பெயர் மாற்றம் - Seithipunal
Seithipunal


தமிழக அரசு, சென்னையின் நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயரை ஓ.டி.ஏ. நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம் என மாற்றியிருக்கிறது.

இந்த மாற்றத்துக்கான அறிவிப்பை தமிழக அரசின் திட்டம், மேம்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மை செயலாளர் ஹர் சகாய் மீனா வெளியிட்டுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர், கடந்த ஜூன் மாதம் அரசு கடிதம் அனுப்பி, “நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தை ஓ.டி.ஏ. மெட்ரோ ரயில் நிலையம் என மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு தென்பிராந்திய ராணுவ தளபதியும் ஆதரவு அளித்திருந்தார். 

இந்த பெயர் மாற்றம் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு, தலைமைச் செயலாளர் தலைமையில் கடந்த ஜூலை மாதம் கூட்டம் நடைபெற்றது. இந்த உயர்மட்டக் குழு, நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயரை ஓ.டி.ஏ. நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம் என மாற்ற பரிந்துரை செய்தது. 

அதன் அடிப்படையில், தமிழக அரசு இந்த பெயர் மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, புதிய பெயருடன் மெட்ரோ நிலையத்தை இனி அழைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sudden name change of Nanganallur metro station


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->