#திருவண்ணாமலை || குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 பெண்கள் தற்கொலை முயற்சி.!!
Suicide attempt against garbage dump construction in thiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டம் புழல் காடு பகுதியில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் குப்பை கிடங்கு அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு அப்பகுதியில் உள்ள 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 40 நாட்களுக்கும் மேலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து குப்பை கிடங்கு அமைக்கும் பணிகள் கடந்த 10 நாட்களாக மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.
இந்த நிலையில் இன்று குப்பை கிடங்கு அமைப்பதற்கான மதில் சுவர் அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் இந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைத்தால் தங்கள் பகுதியில் வாழ்வாதாரம், நீராதாரம் மற்றும் நிலம் மாசுபடும் என எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டம் நடத்தினர்.
இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிர்மலா மற்றும் குமாரி என்ற இரு பெண்கள் குப்பை கிடங்கு அமைய உள்ள இடத்திற்கு எதிரே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர்.
இதனால் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் கிணற்றில் குறித்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Suicide attempt against garbage dump construction in thiruvannamalai