நஷ்டம் காரணமாக பைனான்ஸ் தொழில் செய்தவர் தூக்குப்போட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


நஷ்டம் காரணமாக பைனான்ஸ் தொழில் செய்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு அருகே உள்ள மேலதேவநல்லூர் கீழ் தெருவை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி கிருஷ்ணவேணி தேவநல்லூர் பஞ்சாயத்து தலைவியாவார்.

இவர்களது மகன் சுரேஷ்(வயது 27). இவர் சென்னையில் பைனான்ஸ் தொழில் செய்து, அடிக்கடி பணத்தை வசூல் செய்த பின்பு சொந்த ஊருக்கு திரும்பிவிடுவார்.

இந்நிலையில் சுரேஷுக்கு கடந்த சில நாட்களாக பைனான்ஸ் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதை யாரிடமும் சொல்லாமல் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து சுரேஷ், நேற்று வீட்டு மாடியில் உள்ள படுக்கை அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த களக்காடு காவல்துறையினர் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

suicide by hanging due to loss


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->