உனக்காக நவராத்திரி விரதம் இருக்க போகிறேன் - காதலிக்கு கடிதம் எழுதிய சுகேஷ் சந்திரசேகர்.!  - Seithipunal
Seithipunal


உனக்காக நவராத்திரி விரதம் இருக்க போகிறேன் - காதலிக்கு கடிதம் எழுதிய சுகேஷ் சந்திரசேகர்.! 

இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டதன் மூலம்  பிரபலமானவர் சுகேஷ் சந்திரசேகர். திருமணமான இவர் பல்வேறு நடிகைகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அதற்காக பல கோடிகளை செலவு செய்துள்ளார்.

அவர்களில் ஒருவர் தான் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவரை திருமணம் செய்ய இருந்த நேரத்தில்தான் சுகேஷ் சந்திரசேகர் மீது வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டார். 

இவர் சிறையில் இருந்தாலும் அடிக்கடி கடிதங்கள் எழுதி பரபரப்பாகி வருகிறார். இந்த நிலையில், சுகேஷ் சந்திரசேகர் தன் காதலி ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார். அதில், "பேபி, தோகா ஷோவில் நீ கவர்ச்சியாகவும், மிக அழகாகவும் இருந்தாய். 

என் பொம்மா…உன்னைவிட யாரும் அழகில்லை. உன் நல்வாழ்வுக்காக, நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றுவதற்காக நவராத்திரியான 9 நாட்களும் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன். 

மாதாவின் சக்தியால் எல்லாமே நமக்கு சாதகமாக இருக்கும். உண்மை வெல்லும். நாம் விரைவில் ஒருவரோடு ஒருவராக இருப்போம். என்ன நேர்ந்தாலும் ஒன்றாகவே வாழ்வோம். என் பேபி" என்று காதல் மழை பொழிந்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sukesh chandrasekar write letter to girl friend


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->