நேரலைக்கு தடையா? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழக கோவில்களில் நேரலையில் ஒளிபரப்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, பா.ஜ.க. நிர்வாகி வினோஜ் பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா, "வாய்மொழி உத்தரவை வைத்து எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. 

 

வாய்மொழி உத்தரவை ஏற்று காவல்துறை செயல்படக்கூடாது. சட்டப்படி எதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதோ அதை அனுமதிக்க வேண்டும்.

அயோத்தி ராமர் சிலை பிராண பிரதிஷ்டை நேரலைக்கு சட்டப்படி அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமர் பெயரில் பூஜை ஆகியவற்றை வாய்மொழி உத்தரவைக் கொண்டு தடுக்கக்கூடாது. இதுகுறித்து ஜனவரி 29-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court Ayodhya Ram Temple BJP Ram Temple Ceremony 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->