மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுநடவடிக்கை எடுங்கள்..போலீசாருக்கு எஸ்.பி.விவேகானந்த சுக்லா உத்தரவு! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள்,பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் லாட்டரி விற்பனையில்ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும்போலீசாருக்கு எஸ்.பி.விவேகானந்த சுக்லா அறிவுரை வழங்கியுள்ளார். 

ராணிப்பேட்டை, மாவட்டகாவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மாதாந்திர குற்றகலந்தாய்வு கூட்டம்ராணிப்பேட்டை மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்டத்தில் முக்கிய வழக்குகளான கொலை, அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும், ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கை குறித்தும், நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும்,பிடிகட்டளையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் எதிரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வது,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்ற வழக்குகளில் (POCSO) உள்ளஎதிரிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்கள்ளத்தனமாக மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து மதுபானங்களை கடத்தி வருவோர் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்கள் பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தீவிர தணிக்கையில் ஈடுபட வேண்டும். சட்டவிரோதமாகமணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள்,பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் (சி.டபிள்யூ.சி.),துணை காவல் கண்காணிப்பாளர்கள் இமயவரம்பன் (ராணிப்பேட்டை உட்கோட்டம்),ஜாபர் சித்திக், (அரக்கோணம்உட்கோட்டம்), ரமேஷ்ராஜ் (மாவட்ட குற்றப்பிரிவு), வெங்கடகிருஷ்ணன்
(IUCAW), ராமச்சந்திரன் (மாவட்ட குற்ற ஆவண காப்பகம்), சிவராமஜெயம்
(ஆயுதப்படை), காவல் ஆய்வாளர் அருண்குமார் (மாவட்ட தனிப்பிரிவு),காவல் அதிகாரிகள் கொண்டனர்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Take strict action against those involved in sand smuggling SP Vivekanand Shukla orders police action


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->