10 நாட்களில் 61 பேருக்கு டெங்கு! ஊழியர்கள் இல்லாமல் தள்ளாடும் மாநகராட்சி! - Seithipunal
Seithipunal


தாம்பரம் மாநகராட்சியில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சியின் குறிப்பிட்ட 2 மண்டலங்களில் மட்டும் பொதுமக்கள் அதிகமா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சேலையூர், மாடம்பாக்கம் மற்றும் இரும்புலியூர் ஆகிய பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் 49 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குரோம்பேட்டை மற்றும் பல்லாவரத்தில் கடந்த ஜூலை முதல் 42 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று பெருங்களத்தூர் மற்றும் மேற்கு தாம்பரம் பகுதிகளிலும் காய்ச்சல் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

தாம்பரம் மாநகராட்சியில், ஒரே பகுதியில் சுமார் 32 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த இடத்தை டெங்கு ஹாட்ஸ்பாட் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாய் பணிகள் மற்றும் பிற மாநகராட்சி பணியின் காரணமாக தெருக்களில் மழைநீர் தீங்குவதால் கொசு உற்பத்தி அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

டெங்கு நோயை உண்டாக்கக்கூடிய ஏடிஎஸ் வகை கொசுக்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தாம்பரம் மாநகராட்சியில் கொசு உற்பத்தியை தடுக்க போதிய நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் போதிய ஊழியர்கள் மாநகராட்சியில் இல்லை என காரணம் கூறும் மாநகராட்சி அதிகாரிகள் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ள 2 மற்றும் 5வது மண்டலங்களில் 7 ஊழியர்கள் மட்டுமே நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மற்ற மண்டலங்களில் ஊழியர்களின் பற்றாக்குறையால் டெங்கு பரவலை கட்டுப்படுத்த சிரமம் ஏற்பட்டுள்ளதால் கால்வாய்களில் கொசு புழுக்கள் உற்பத்தியை தடுக்க, கொசு விரட்டி அடித்து வருவதாகவும், வீடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கொசு விரட்டி புகைகள் அடிக்கப்பட்டு வருவதாக தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி தரப்புத் தெரிவித்துள்ளது. டெங்கு பரவல் தடுக்க போதிய ஊழியர்கள் இல்லாமல் தாம்பரம் மாநகராட்சி தள்ளாடி வருவதாக குற்றம் சாட்டு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tambaram Corporation struggling staff shortage to prevent dengue fever


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->