இரயிலில் உறங்கிய பெண்மணி பாலியல் வன்கொடுமை... தற்காலிக இரயில்வே ஊழியர்களால் அரங்கேறிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் பகுதியை சார்ந்த 40 வயது பெண்மணி, கடந்த 8 ஆம் தேதி பல்லாவரத்தில் இருந்து பரனூர் செல்ல செங்கல்பட்டு மின்சார இரயிலில் எறியுள்ளார். இவர் மது அருந்தியிருந்த நிலையில், போதையில் உறங்கியுள்ளார். 

இதன்பின்னர், இரயில் செங்கல்பட்டு சென்றுவிட்டு மீண்டும் சென்னை கடற்கரை இரயில் நிலையத்திற்கு சென்று தாம்பரத்திற்கு வந்துள்ளது. பின்னர் பயணிகளை இறக்கிவிட்டு பணிமனைக்கு சென்றுள்ளது. இந்நிலையில், நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கண்விழித்து பார்க்கையில் பெண்மணி இரயில் பணிமனையில் இருப்பதை கண்டு அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். 

நீண்ட நேரம் ஆகிவிட்டதால் இரயிலிலேயே விடியும் வரை இருந்துவிட்டு, மீண்டும் காலையில் செல்லலாம் என முடிவு செய்துள்ளார். இந்நிலையில், அங்கு வந்த இரயில்வே பணிமனை தற்காலிக ஊழியர்கள் சுரேஷ் (வயது 30), அஜீஸ் (வயது 30) ஆகியோர் பெண்ணை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இதனை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டிய நிலையில், பெண்மணி தாம்பரம் இரயில்வே காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அஜீஸ் மற்றும் சுரேஷை கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tambaram Electric Train Logo Yard girl Sexual Abuse by Tempravorily Workers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->