தாம்பரம் : பிரபல நகைக்கடையில் கொள்ளை.. வடமாநில இளைஞர் கைது.!
Tambaram Robbery at Blue stone jewelry store North State youth arrested
சேலையூர் வேளச்சேரி சாலையில் உள்ள ப்ளூ ஸ்டோன் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் அருகே சேலையூர் - வேளச்சேரி சாலையில் உள்ள ப்ளூ ஸ்டோன் பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான வைரம், தங்கம் நகைகள் நேற்று இரவு கொள்ளையடிக்கப்பட்டது.
மாடி வழியாக வந்த கொள்ளையர்கள் லிப்டில் இறங்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில் கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து நகைகளையும் திருடியுள்ளனர். மேலும் லாக்கரை திறக்க முயற்சி செய்தபோது எச்சரிக்கை அலாரம் அடித்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கைரேகை மற்றும் தடவியல் நிபுணர்கள் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட வாலிபர் நகைக்கடைக்கு அருகில் உள்ள பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்த வாலிபரை சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Tambaram Robbery at Blue stone jewelry store North State youth arrested