10 வருடத்தில் 3228 தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை கடற்படை! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கும், இலங்கைக்கும் குறிப்பாக தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 25 கிலோ மீட்டர் முதல் 40 கிலோமீட்டர் மட்டுமே.

இந்த இஅடைபட்ட கடல் பகுதியில் தான் இருநாட்டு மீனவர்களும் மீன் பிடிப்பதில், எல்லை தாண்டி வந்ததாக கைது செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது.

குறிப்பாக இந்திய மீனவர்களே, அதாவது தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களே இலங்கை கடற்படைகளால் கைது செய்யப்பட்டு, துன்புறுத்தலுக்கு ஆளாகி, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுவதும், சிறை தண்டனை அனுபவிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. 

இந்த நிலையில், தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் 3228 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் தமிழகத்தை சேர்ந்த மீனவர்களின் 365 படகுகள் இலங்கை நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது. 21 படகுகள் இலங்கை நீதிமன்றத்தால் தற்போது வரை விடுவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த தகவல் உரிமை அதிகம் சட்டத்தின் கீழ் வெளியான தகவலின் படி,

2014-ல் 787 பேரும், 2015-ல் 454 பேரும், 
2016-ல் 290 பேரும், 2017-ல் 453 பேரும், 
2018-ல் 148 பேரும், 2019-ல் 203 பேரும், 
2020-ல் 59 பேரும், 2021-ல் 159 பேரும், 
2022-ல் 237 பேரும், 2023-ல் 230 பேரும், 
2024 ஜூலை வரை 268 பேர் என இதுவரை 3,288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


2014-ல் 164 படகுகளும், 2015-ல் 71 படகுகளும், 
2016-ல் 51 படகுகளும், 2017-ல் 82 படகுகளும், 
2018-ல் 14 படகுகளும், 2019-ல் 41 படகுகளும், 
2020-ல் 9 படகுகளும், 2021-ல் 19 படகுகளும், 
2022-ல் 34 படகுகளும், 2023-ல் 34 படகுகளும், 
2024  ஜூலை வரை 39 படகுகள் என 558 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Fisherman Arrested Report


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->