மகிழ்ச்சியில் மாணவர்கள்!தமிழக அரசு ₹48.95 கோடி கல்விக் கடனை தள்ளுபடி!
Tamil Govt waives off 48 crore education loan
தமிழக அரசு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்துள்ளது.
அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, 1972-73 முதல் 2009-10 வரையிலான காலக்கட்டத்தில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், 2003-04 முதல் 2009-10 வரை வழங்கப்பட்ட கல்விக் கடன்களை வசூலிக்க தேவையான பதிவேடுகள் இல்லாததால், மாணவர்களிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, மொத்தமாக ₹48.95 கோடி கல்விக் கடனை அரசு தள்ளுபடி செய்துள்ளது.
இந்த முடிவின் மூலம் பல மாணவர்கள் கடன் செலுத்தும் சுமையிலிருந்து விடுபட வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், உயர்கல்வி முடித்த பின்னரும் பொருளாதார சிக்கலால் கடன் செலுத்த முடியாத நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு இது ஒரு முக்கிய நிவாரணமாக அமைகிறது.
English Summary
Tamil Govt waives off 48 crore education loan