தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர்!
Tamil Nadu election Commission released draft voter list
சென்னையில் இன்று தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டார். இன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற உள்ளது. இதற்காக இன்று காலை 10 மணி முதல் அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் வார்டு வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை சென்னையில் மாநகராட்சி கமிஷனரும் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களும் வரைவு வாக்காளர்கள் பட்டியலை வெளியிட்டனர்.
சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு அவர் பேசியதாவது "தமிழகத்தில் மொத்தம் 6,18,26,182 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 3,30,95,103 பேர்.க்ஷ, பெண் வாக்காளர்கள் 3,14,23,321 பேர், மூன்றாம் பாலினத்தவர் 7,758 பேர். இதுவரை இறந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2.44 லட்சம் பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 15.25 லட்சம் பேர் என மொத்தம் 17.69 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாக்காளர் பட்டியலில் சட்டமன்றத் தொகுதி வாரியாக அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.66 லட்சம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்" என தெரிவித்தார். மேலும் இன்று முதல் ஒரு மாதத்திற்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்ற விண்ணப்பக்கலாம்.
வரும் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும். இந்த முகாமில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் சேர்க்கும் பணியும் நடைபெற உள்ளது. இந்த முறை 17 வயதான இளைஞர்களும், பெண்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tamil Nadu election Commission released draft voter list