தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
Tamil Nadu fishermen not allow to the sea
ராமேஸ்வரம் கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அதேபோல், ராமேஸ்வரம் கடற்பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு சென்று மீன் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
English Summary
Tamil Nadu fishermen not allow to the sea