தமிழக அரசு தீர்மானம்...கொண்டாடி தீர்த்த கிராம மக்கள்!
Tamil Nadu government's decision The people of the village celebrate
மதுரை டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திதமிழக அரசு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியதையடுத்து போராட்டம் நடத்திய மக்கள், தமிழக அரசு தீர்மானத்தை வரவேற்று இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏல அனுமதி வழங்கியதால் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என கூறி அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக சட்டசபையில் மதுரை டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து மதுரை மாவட்டம் வெள்ளிமலையாண்டி கோவில் அருகே போராட்டம் நடத்திய மக்கள், தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்று இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
English Summary
Tamil Nadu government's decision The people of the village celebrate