இனி 4 லட்சம் நிதி! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி அரசாணை!
Tamil Nadu heat wave state disaster TN government order
வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழக அரசு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் வெப்ப அலை பாதிப்பால் ஏற்படும் இழப்பீடுகளுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, தமிழகத்தில் கோடை காலத்தில் வெப்ப அலை அதிகமாக இருக்கும்.
குறிப்பாக அக்னி நட்சத்திரம் காலத்தில் தமிழகத்தில் வெயில் வெளுத்து வாங்கும். இதிலிருந்து மக்களை காப்பதற்காக தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் இந்த கடுமையான கோடை கால வெப்ப அலை காரணமாக மரணங்கள் நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில், வெப்ப அலை காரணமாக உயிர் இழப்பவர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 4 லட்சம் ரூபாய் வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் வெப்ப அலையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவத்துறை வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து பொதுமக்களுக்கான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அதிகம் கூட கூடிய பகுதிகளில் பொது மக்களின் வசதிக்காக தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர் வழங்க பேரிடர் நிதியை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
English Summary
Tamil Nadu heat wave state disaster TN government order