#BREAKING: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடையா? உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு மனு! - Seithipunal
Seithipunal


ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரிய மனு அளிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா முறையீடு செய்துள்ளார்.

சித்தார்த் லூத்ரா தாக்கல் செய்த இந்த மனுக்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

வழக்கின் விவரமும், பின்னணியும்:

விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை கடந்த மே 18ஆம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுவினை அவசர வழக்காக விசாரணை செய்யக் கோரியும் முறையிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தமிழர்களின் மிகப் பாரம்பரியமாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்து சில வருடங்கள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாத நிலையில், இளைஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் தன்னிச்சையாக எழந்து போராட்டம் நடத்தியதன் காரணமாக, மத்திய மாநில அரசுகள் வேறு வழியில்லாமல் சிறப்பு சட்டம் இயற்றி தற்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu jallikattu supreme court new case file


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->