26 வாரம் தொடர்ந்து மக்களுக்கு ரொட்டி, பால் ,முட்டை வழங்கிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்!  - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் உத்தரவுப்படி சென்னை கிழக்கு மாவட்டம்  மதுரவாயல் தொகுதி ராமாபுரம் பகுதியில்  26வது வாரமாக 100க்கும் மேற்பட்டோருக்கு  விலையில்லா ரொட்டி, பால் ,முட்டை,ஆகியவற்றை 155 வது வட்ட தலைமை சார்பில் ஆகாஷ் வழங்கினார்.முன்னதாக 76-வது குடியரசு தின விழாவையொட்டி தேசிய கொடியை ஏற்றி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். 

தமிழக வெற்றிக் கழக மாநாடு முடிந்த கையோடு செயற்குழு கூட்டம் நடந்த நிலையில் பொதுச்செயலாளர் அனந்துக்கு ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கட்சியின் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்து மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆய்வறிக்கை சமர்ப்பிக்குமாறு விஜய் உத்தரவிட்டதாகத் தகவல் வெளியானது.இதையடுத்து  மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுத்து அவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தொடர்ந்து கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கட்சியின் பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட முதன்மை நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து கட்சி பணிகள் குறித்துக் கேட்டு வருகிறார். இந்தநிலையில் பட்டினி தினத்தன்று ஏழைகளுக்கு உணவு வழங்க  தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் கேட்டுக்கொண்டார்,மேலும் ஏழைகளுக்கு உதவி செய்யவும் தொண்டர்களையும் ,நிர்வாகிகளையும் கேட்டுக்கொண்டார்.

 அதன் அடிப்படையில்  தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் உத்தரவுப்படி  அகிலஇந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி N. ஆனந்த் எவர்களின் வழிகாட்டுதல்படி  சென்னைகிழக்கு மாவட்டம் தலைவர்  அம்பத்தூர் .பாலமுருகன்  அவர்களின் தலைமையில்  ஏழை எழிய குழந்தைகளுக்கு மற்றும் பள்ளி பயிலும் மாணவ மாணவிகளுக்கு  தமிழக வெற்றி கழகம் சார்பாக 
விலையில்லா ரொட்டி, பால் ,முட்டை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு வாரம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது.மதுரவாயல் தொகுதி ராமாபுரம்  155வது வட்டம்  கழக நிர்வாகிகள் மற்றும் உற்பினர்கள் சார்பாக  ஆகாஷ் தலைமையில் வெற்றிகரமாக 26வது வாரம் விலையில்லா ரொட்டி, பால் ,முட்டை வழங்கப்பட்டது. இதில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பங்கேற்று பயனடைந்தனர்.முன்னதாக 76-வது குடியரசு தின விழாவையொட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து  அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Vetri Kazhagam organisers distribute bread, milk and eggs to people for 26 weeks 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->