திமுகவின் உண்மையான பொய் முகம் இதுதான் - தமிழிசை சவுந்தரராஜன் தாக்கு.! - Seithipunal
Seithipunal


பாராளுமன்றத்தில் செங்கோலை அகற்றும் படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். செங்கோல் குறித்த சமாஜ்வாதி எம்.பி. சவுத்ரியின் கருத்துக்கு தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 

செங்கோல் என்பது கொடுங்கோல் சின்னம் கிடையாது. செங்கோல் என்பது மக்களாட்சியின் சின்னம். எந்த தமிழ் அரசரும் மக்கள் ஆட்சி மீறி ஆட்சி நடத்தவில்லை.தமிழ் மண்ணின் நீதி தவறாமல் ஆட்சி நடப்பது என்பதற்கான குறியீடு தான் செங்கோல். 

பாராளுமன்றமும் அப்படி இருக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அதை நிறுவினார். கொடுங்கோல் ஆட்சி செய்து கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்த செங்கோலின் தன்மையும் புனிதத்துவமும் தெரியாது என்பதை அவர்கள் இன்று வெளிப்படுத்தியுள்ளனர். 

செங்கோலை எதிர்ப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையே திமுக எதிர்கிறது. அரசியலுக்காக எந்த கீழ் தரமான கருத்துகளையும் திமுக வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்க்கலாம். 

ஆனால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எதிர்க்கலாமா. திராவிட முன்னேற்றக் கழகத்தில் உண்மையான பொய் முகம் இன்று தெரியவந்துள்ளது. தமிழும் தமிழ் கலாச்சாரமும் அவர்களின் அரசியலுக்காக தான் அவர்களின் உணர்வுக்காக அல்ல என குறிப்பிட்டுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilisai Soundararajan says DMK true false face 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->