10 & 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.. ரிசல்ட் பார்ப்பது எப்படி.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 20-ந்தேதி முடிவு பெற்றது.இத்தேர்வை 9.40 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். மேலும் மார்ச் 13-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை நடைபெற்ற பிளஸ்-1 பொதுத்தேர்வை 7.70 லட்சம் மாணவ-மாணவிகளும் எழுதினார்கள். 

இதைத்தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கி மே 4-ந்தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதில் 10-ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கும், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது.

தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள், www.tnresults.nic.in, www.dge.in.gov.in என்ற இணையதளத்தில், பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை அலுவலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu 10th and 11th public exam results today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->