தமிழகத்தில் வங்கிகள் செயல்படும் நேரம் அறிவிப்பு - தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு.!
Tamilnadu Bank Working Time Announced till 13 June 2021
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கானது ஜூன் 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, வங்கியின் வேலை நேரத்தையும் குறைத்து 13 ஆம் தேதி வரை செயல்பட தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி, வங்கிக்கிளைகள் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை செயல்படும். வங்கிபரிவர்த்தனைகள் ஏற்கனவே அறிவித்தது போல பகல் 2 மணிவரை மட்டும் நடைபெறும். மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் அனைத்தும் வழக்கம்போல 5 மணிவரை செய்யப்படும். மூன்றில் ஒருபங்கு ஊழியர்கள் மாற்று முறையில் பணியில் ஈடுபடுவார்கள்.
ரொக்கப்பரிவர்த்தனை, இணையவழி பரிவர்த்தனை என்.இ.எப்.டி, ஐ.எம்.பி.எஸ்., ஆர்.டி.ஜி.எஸ் பணம் அனுப்பும் சேவை நிகழ்நேர மொத்த தொகை செலுத்துதல் சேவை வழங்கப்படும். அரசு வர்த்தகம், காசோலை சேவைகள் வழங்கப்படும். ஏ.டி.எம் பணம் எடுக்கும் இயந்திரம் மற்றும் பணம் செலுத்தும் இயந்திரம் செயல்படுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tamilnadu Bank Working Time Announced till 13 June 2021