அன்னதானம் பண்ணுங்க.. யார் தடுக்குறானு பாப்போம் - அதிரவைத்த அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதியான நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு வட மாநிலங்களில் பல்வேறு நிறுவனங்களுக்கு அரைநாள் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, தமிழ்நாடு முழுக்க உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்த அரசு தடை விதித்து இருப்பதாக தகவல் வெளியானது. அதே சமயம், இந்த செய்தி உண்மையில்லை என்றும் இதுபோன்ற தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், நாளை ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுக்க அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தவும், அன்னதானம் வழங்கவும் பா.ஜ.க. முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "கோவில்களில் நடக்கும் சிறப்பு பூஜைகளுக்கு அனுமதி கொடுக்க தி.மு.க. அரசுக்கு என்ன பிரச்சினை உள்ளது. தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டு, காவல் துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

கோவில்களுக்குள் நடக்கும் விஷயங்களுக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்மந்தம். இந்த விவகாரத்தில் மைனாரிட்டி அரசியல் செய்கிறார்கள். நாளை அமைதியான முறையில் கோவில்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளை தி.மு.க. அரசு தடுக்க நினைப்பதை எந்த காலத்திலும் ஏற்க முடியாது. இதனால் பா.ஜ.க.வினர் எல்லா கோவில்களிலும் சிறப்பு பூஜை செய்யுங்கள், அனுமதி தேவையில்லை.

அனைத்து கோவில்களிலும் அன்னதானம் கொடுங்கள், திருப்தியாக சாப்பாடு கொடுங்கள், பஜனை பண்ணுங்க, ராமர் கீர்த்தனை பண்ணுங்க. நாளை ஜனவரி 22, ராமர் கோவில் பிரான பிரதிஷ்டையை ஒட்டி கோவில்களில் விழா எடுங்க, யார் தடுப்பாங்கனு பார்ப்போம். இதை தடுத்தால் தான் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்" என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu bjp leader annamalai press meet about special pooja in temples


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->