சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்ஸோவில் பாஜக தலைவர் கைது.!
tamilnadu bjp leader ms sha arrested for harassment case
தமிழக பாஜக பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், எம்.எஸ்.ஷா மீது 15 வயது பள்ளி மாணவி ஒருவரின் தந்தை, கடந்த ஆண்டு மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், தனது மகளின் செல்போனுக்கு பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷாவின் செல்போன் எண்ணில் இருந்து வந்த ஆபாசமான உரையாடல் இருந்தது. ஆசை வார்த்தைகூறி அவளை அழைத்துச்சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதற்கு எனது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகாரையடுத்து, பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷா மற்றும் மாணவியின் தாய் ஆகிய இருவர் மீதும், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் அவர்கள் இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
tamilnadu bjp leader ms sha arrested for harassment case