#தஞ்சாவூர் : தேர் விபத்து நடந்த தஞ்சை களிமேட்டிற்கு செல்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.!
Tamilnadu chief minister MK Stalin going to Thanjavur
தஞ்சாவூர் களிமேடு பகுதியில் தேர் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் வருடம் தோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த கோவிலில் 94 ஆவது ஆண்டு சித்திரைத் திருவிழா தேரோட்டம் நேற்று நள்ளிரவு தொடங்கி நடைபெற்று வந்தது.
அப்போது பூதலூர் சாலையில் களிமேடு என்ற பகுதியில் தேர்பவனி வந்து கொண்டிருந்த போது தேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அதற்கு 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த அவர்கள் உலகை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக தஞ்சாவூர் களிமேடு தேர் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தேர் திருவிழா விபத்து நடந்த தஞ்சை களிமேடு கிராமத்துக்கு இன்று காலை 11 மணியளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Tamilnadu chief minister MK Stalin going to Thanjavur