அமெரிக்காவுக்கு செல்லும் முதல்வர் மு.க ஸ்டாலின்.!! தயாராகும் பயண திட்டம்.. எதற்கு தெரியுமா? - Seithipunal
Seithipunal


கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தின் முதலீடு செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்தார். 

இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்த அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி "தமிழக முதலமைச்சருடன் மகிழ்ச்சியான சந்திப்பு. தமிழ்நாடு குறித்து அறிந்து கொள்வதற்கும் இந்த செழிப்பான மாநிலத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் ஆன பொருளாதார உறவுகளை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதை பற்றியும் விவாதித்தோம்" என பதிவிட்டு இருந்தார். 

இந்த நிலையில் ஒரு ஆகஸ்ட் மாதம் முதலீட்டை ஈர்க்கும் நோக்கில் அமெரிக்கா செல்ல தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்களவைப் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவு பெற்ற பிறகு ஆகஸ்ட் மாதம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அமெரிக்கா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu cm MKStalin planing to visit USA


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->